Home » » சூரியன்

சூரியன்




சூரியன்




சூரியனும் ஒரு விண்மீனே. இது பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன்(கோள்கள் வேறு விண்மீன்கள் வேறு). இது ஒரு நெருப்புக்கோளம். எனவே, இதன் அருகில் செல்லவே முடியாது. இது பூமியைப் போலப் பல மடங்கு பெரியது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது. சூரியன், சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள, சூரிய மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனின் எடை மட்டுமே சூரிய மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு சுமார் 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். சூரியனில் இருந்து ஒரு ஒளிக்கற்றை பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. 

கதிரவன் பெருமளவில் ஐதரசன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஈலியம் (சுமார் 24% நிறை, 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன், கந்தகம், மக்னீசியம், கரிமம், நியான், கல்சியம், குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
சூரியக் குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய எட்டு கோள்கள் உள்ளன. முன்னர் இந்த வரிசையில் புளுட்டோ என்ற ஒன்றும் ஒன்பதாவது கோளாக இருந்தது. அது ஒரு கோள் அல்ல என்று அண்மையில் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து நீக்கி விட்டனர். இந்தக் கோள்கள் எல்லாமே ஓர் ஒழுங்கான இடைவெளிகளில் தள்ளித் தள்ளி சூரியனைச் சுற்றி வருகின்றன. இக்கோள்களை சூரியனுக்கு அருகில் இருப்பவை, சூரியனுக்கு தொலைவில் இருப்பவை என்று இரு வகையாகப் பிரிக்கலாம். உள்கோள்கள், வெளிகோள்கள் என்றும் கூட சொல்லலாம்.

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவை உள்கோள்கள். இவற்றில் பூமிதான் பெரியது. இக்கோள்கள் அனைத்துமே அடர்த்தியானவை; பாறைகளால் ஆனவை. அதனால் இவைகளை புவிக் கோள்கள் என்றும்கூட அழைப்பதுண்டு.
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை வெளிக் கோள்கள். இவை அனைத்தும் உருவத்தில்
பெரியவையாகும். பல துணைக்கோள்களும் கூட இவைகளுக்கு உண்டு. இந்தக் கோள்களின் பெரும்பகுதி ஹைட்ரஜன் (நீர்வளி), ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆனவை. இவைகளின் சுழற்சி வேகமும் மிக அதிகம்.

இந்த கோள்கள் அனைத்துமே ஒரே சீரான இடைவெளியில் சுழல்கின்றன. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவை ஓர் அலகாகக் கொண்டால் புதன் 1/3 தூரத்திலும், வெள்ளி 2/3 பங்கு தூரத்திலும், செவ்வாய் 1.5 மடங்கு தூரத்திலும்,வியாழன் 5 மடங்கு தூரத்திலும், சனி 10 மடங்கு தூரத்திலும், யுரேனஸ் 20 மடங்கு தூரத்திலும், நெப்டியூன் 30 மடங்கு தூரத்திலும் உள்ளன. இந்தக் கோள்கள் அனைத்தும் சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.


Share this article :

Post a Comment