Home » » சூரிய குடும்பம்

சூரிய குடும்பம்




சூரிய குடும்பம் 

சூரியக் குடும்பம் என்பது சூரியனையும், சூரியனின் ஈர்ப்பு விசையின் கட்டுப் பாட்டிலுள்ள அனைத்து பொருட் களையும் உள்ளடக்கியது. கதிரவனைச் சுற்றி வரும் எட்டுக் கோள்களையும், இக்கோள்களின் 162 (இது வரை தெரிந்த கணக்கெடுப்பின்படி) துணைக் கோள்களையும் மூன்று குறுங் கோள்களையும் அக் குறுங்கோள்களின் ஐந்து துணைக் கோன்களையும் மற்றும் ஆயிரக் கணக்கான பிற பொருள்களையும் சூரியக் குடும்பம் உள்ளடக்கியுள்ளது.

பிற பொருட்கள், வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்களுக்கு இடையே உள்ள விண் துகள்களும் இவற்றுள் அடங்குகின்றன. சுமார் 4.6 பில்லியன் (460 கோடி) வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரும் அணுத் திரண்ம மேகம் நுண்கூறுகளாக நொருங்கியதில் இருந்து ஈர்ப்பு விசையால் இழுக்கப்படும் பல விண்ணுலகக் காட்சிப் பொருள்கள் தோன்றின. அதனுள் அடங்கும் சூரியனை நடுவில் கொண்டதுதான் சூரியக் குடும்பம். பரிவாரம் என்னும் அந்தக் காட்சிப் பொருட்கள், சூரியனை ஏறத்தாழ தட்டைவட்டு எனப்படும் கதிர்வீதிப் பரப்பில் சுற்றி வலம்வர அதன் நிறையில் அடங்கும் ஒன்றுக்கொன்று சம்பந் தப்பட்ட எட்டு தனித்தனிக் கோள்கள் அதன் கதிர்வீதிகளான ஏறத்தாழ வட்டப் பாதையில் உலாவரத் தொடங்கின.

சூரியக் குடும்பமானது சிறு பருப்பொருள்கள் உள்ள இரு முக்கியத் திணை மண்டலங்களுக்குத் தாயகமாக அமைந்திருந்தது. அதில் ஒன்று விண்மீன் வடிவத் திணை மண்டலம் ஆகும். அது செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே உள்ளது. 1930 முதல் 2006 ஆம் ஆண்டுகள் வரை புளூட்டோ ஒரு கோளாகக் கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் அனைத்துலக வானியல் ஒன்றியம் 2006ல் ஒரு கோள் என்பது யாது என ஒரு வரையறையை முறைப் படி அளித்துள்ளது.

இதன் அடிப்படையில் கதிரவனைச் சுற்றி 8 கோள்கள் தான் உள் ளன என்றும், ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்ட புளூட்டோவானது ஒரு கோள் அல்லவென்றும் குயிப்பர் பட்டையில் உள்ள ஒரு பெரும் பொருள் என் றும் அறிவித்தது. தற்பொழுது புளூட்டோ ஒரு குட்டைக் கோள் என்று குறிக்கப் படுகின்றது. சூரியக் குடும்பத்தில் பல்வேறு உப பகுதிகளாக சிறு பரூப் பொருட்கள் உள்ளன. வால் மீன்கள், கலப்பினம் சார்ந்த மீன்கள், கிரகங்களுக்கிடையே மண்டிக் கிடக்கும் தூசுப் படலம் தடையின்றி இந்த திணை மண்டலங்களில் அவைகள் பயணித்துக் கொண்டிருக் கின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் ஒருசில குறிப்பிடத் தக்க விதிவிலக்குகளுடன் சூரிய குடும்பம் இருந்ததாகவே அறிந்து கொள்ள வில்லை. அவர்கள் புவியானது அசைவற்றது எனவும் பிரபஞ்சத்தின் நடுவில் இருப்பது எனவும் நம்பி னார்கள். கண்புலன் ஆகாத தெய்வீகப் பொருள் வான் ஊடே நகர்வது என்று ஆணித்தரமாகக் கருதினார்கள். இந்திய கணிதமேதையும் வான சாஸ்திர வல்லுனருமான ஆரியபட்டா மற்றும் கிரேக்க சமோஸ் நகர தத்துவ அறிஞருமான அரிஸ்டாற்சாஸ் இருவரும் ஆய்வு ஊக செய்தியாக அண்டம் பற்றி மறுவரிசைப் படுத்தினர்.

நிக்கொலஸ் கொப்பர்னிக்கஸ் என்ப வர்தான் சூரிய குடும்பத்தில் சூரியன் தான் மையஸ்தானம் கொண்டவன் என கணித பூர்வமாக முன்கூட்டி அறிவித்தவராவார். பதினேழாம் நூற்றாண்டில் அவருக்குப் பின் வந்த வர்களான கலிலியோ கலிலி, யோகா ன்னஸ் கெப்லர் மற்றும் ஐசக் நியூட் டன் ஆகிய மூவரும் இயற்பியலை புரிந்து கொள்ளும் தன்மையை வளர் த்தனர். அதன் விளைவாக அவர்களது நோக்கம் படிப்படியாக நாளடைவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் கருத்து வருமாறு :-

‘பூமிதான் எப்போதும் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றது. பூமியை ஆளும் இயற்பியல் விதிகளே கிரகங்களையும் ஆள்கின்றன. தற்போது பயன்படும் தொலைநோக்கு கண்ணாடி மற்றும் ஆளில்லா விண்கலம் ஆகியன புவியியல் ரீதியான அரிய செய்திகளை ஆராய்ந்து அறிய வைத்தன. மலைகள், எரிமலை வாய்கள் பற்றித் தெரிந்து கொள்ள வைத்தன. மேலும் பருவகால வானிலை சம்பந்தமான அறிய நிகழ்வுகளான மேகங்கள் தூசிப்புயல்கள் பனி முனைகள் என கிரகங்கள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ளச் செய்தன. அசைவாற்றல் மற்றும் இயற்பியல்படி சூரியனை சுற்றிவரும் பொருள்கள் அதிகார பூர்வமாக மூன்று வகைப்பாடு களாக பிரிக்கப்பட்டுள்ளன. கிரகங்கள், குள்ள கிரகங்கள், மற்றும் சிறிய சூரிய குடும்பத்துப் பருப்பொருள்கள்.

ஒரு கிரகம் சூரியனை வட்டப் பாதை யில் சுற்றி வரும். அது போதுமானதாக உள்ள பொருண்மையுடன் உருண்டை வடிவம் படைக்கப் பெற்றதாகவும் இருக்கும். மேலும் அதனுடைய அண்டை இடத்தை தெளிவுபடுத்துதல் அண்டை அருகாமைப் பகுதிகளில் உள்ள சிறு பொருள்களை நெருங்க விடாது கவனமாகப் பார்த்துக் கொள்ளும் இந்த வரையறைப்படி சூரிய குடும்பம் தன்னுள் எட்டு தெரிந்த கிரகங்களைக் கொண்டுள்ளது. மெர்குரி, வீனஸ், பூமி, மார்ஸ், ஜுபிடர், (வியாழன்), சற்றேன் (சனி), யுரேனஸ் மற்றும் நெப்டியூன். இந்த வரைமுறைக்கு புளூட்டோ கிரகம் பொருந்தாது. ஏனெனில் அது தன்னைச் சுற்றிலும் உள்ள குயபெர் திணை மண்டலப் பொரு ள்களை விளக்கித் தள்ளாமல் விட்டு வைத்துள்ளது. ஒரு குள்ள கிரகம் சூரியனைச் சுற்றி வரும் விண்ணுலகப் பருப்பொருளாகும். இந்த வரைய றைப்படி சூரிய குடும்பம் ஐந்து குள்ள கிரகங்களைக் கொண்டுள்ளது. சிரிஸ், புளூட்டோ, ஹாமியா, மேக்மேக் மற்றும் எரிஸ் ஆகும்.

சூரியன் தனது குடும்பத்தில் அமை ந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரமாகும்,. அதன் முக்கிய கூட்டமைப்பில் இருந்து மிக அதிகத் தொலைவில் உள்ளது. அதன் பரந்த பொருண்மை (332,900 பூமி பொருண்மைகள்) அதற்கு உள்ளார்ந்த அடர்த்தியையும், அணுக்கரு உருகி இளகும் நிலையைப் போதுமான அளவிற்கு தாக்குப் பிடிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. ஏராளமான அளவில் எரிசக்தி வெளியேற்றும் சக்தி படைத்திருக்கும் சூரியன் பரந்த வனவெளியில் கதிர் வீச்சை செலுத்துகின்றது. அக்கதிர்வீச்சு மின்சாரக் காந்த சுற்றெறிவாக நெடும் தூரம் தாண்டிப் போவதால் நாம் அதை கட்புலனாகும் ஒளி எனக் கூறுகின்றோம்.

பால் மண்டலத்தில் உள்ள பெரும் பான்மையான உடுக்களில் சூரியனே பெரியதும் மற்றும் வெளி ச்சம் அதிகம் கொண்டது மாகும். சூரியனைக் காட்டிலும் வெளிச்சம் மற்றும் வெப்பம் இரண்டிலும் மிகுதியாக உள்ள உடுக்கள் அபூர்வமா கவே உள்ளன. அதேசமயம் கணிசமான அளவில் மங்கலாகவும், மற்றும் குளிர்ந்திருக்கும் உடுக்கள், சிவப்புக் குள்ள மீன்கள் என்றழைக்கப்படுகின்றன. இத்தகையவையே பால் மண்டலத்தில் பொதுப் படையாக 85 சதவீதம் காணப்படுகின்றன. சூரியனின் மைய ஸ்தானம் ஓர் உடுவின் பிரதம வாழ்க்கைக்குரியதாக இருக்கின்றது. அதன் அணுக்கரு உருகி இளகும் நிலை ஹைட்ரஜன் இருப்பு அதிக பட்ச முள்ளதால் தீர்ந்து போகா வண்ணம் கொண்டுள்ளது.

அதன் ஆரம்பகால வரலாற்றின்படி 70 சதவீதம் வெளிச்சம் கொண்டிருந்த சூரியன் தற்போது அதைவிட அதிகம் கொண்டிருப்பது அதற்குப் பெருமை சேர்க்கும் இன்றியமையாத விஷய மாகும். சூரியன் ஒரு ‘வெகுஜன முதல் நட்சத்திரம்’ ஆகும். பிரபஞ்சத்தின் படிப்படி வளர்ச்சியில் காலங்களில் பிற்பகுதியில் அது தோன்றியுள்ளதாகக் கருதப்படுகின்றது. முதல் தலைமுறை உடுக்கள் மடிந்த பின்னரே பிரபஞ்சம் மற்ற அணுக் கூறுகளால் உருவாக்கம் செழுமையாகக் கண்டது. பழைய உடுக்கள் ஒருசில உலோகங்களைக் கொண்டுள்ளன. பிறகு வந்த உடுக்கள் அதிகம் அவைகளை விடக்கொண்டிருந்தன. அப்படி உலோக மயமாக்கப்பட்ட தன்மையே சூரியனின் வளர்ச்சிக்கு இன்றியமையாத முக்கியத்துவம் தருகிறது.

சூரியன் ஒளியுடன் சுற்றெறிவாக வீசுவது ஒரு தொடர் முடுக்கப்பெற்ற நுண்துகள்களின் ஊற்றாகும். அதை ஒரு நுண் இழைமம் என்பர். அதற் குள்ள வேறு பெயர்தான் ‘கதிரவன் காற்று’ ஆகும். அந்த நுண்துகள்களின் ஊற்றொழுக்கு ஒரு மணிக்கு ஒன்றரை மில்லியன் கிலோ மீற்றர்கள் வேகத்தில் வெளிவருகின்றன. அதனால் ஒரு மெல்லிய வளிமண்டலம் உருவாகியுள் ளது. அதை ‘ஹீலியோ மண்டலம்’ என்றும் அழைப்பர் அது கதிரவன் மண்டலத்தை குறைந்த பட்சம் 100 ஏயூ என்ற கணக்கில் ஊடுருவியுள்ளது. கிரக இடைப்படு ஊடகம் என்கின்ற பெயரினில் அது அழைக்கப் படுவதுண்டு.

பூமியின் ஈர்ப்பு விசைப் பரப்பானது வளிமண்டலம் வரைக்கும் நிலவுகின் றது. அதன்பின் கதிரவன் காற்றால் அவை பறிக்கப்படுகின்றன. வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு ஈர்ப்புவிசை எதுவும் கிடையாது. அதன் விளைவாக கதிரவன் காற்று அவற்றின் வளி மண்டலங்களைப் படிப்படியாக கசிந்துருகச் செய்கின்றன. கதிரவன் காற்றானது பூமியின் ஈர்ப்பு விசையுடன் கலந்து உட்செயல் புரிவதால் விசையூட்டப் பெற்ற நுண்துகள்கள் செங்கோணங்களில் குழல்வாயில் திரவம் பெய்வது போல, செலுத்தப் படுவதால் பூமியின் மேற்புற வளிமண்டலம் வழியாக துருவ மின் ஒளிப்படலத்தை உருவாக்குகின்றது. அதன் நிறங்கள் அடர்ந்த மஞ்சள் அதனுடன் சிவப்பாக அமைந்திருக்கும். அதை துருவ காந்த முனைகளில் பார்ப்பதற்கு ஏதுவாகும்.

சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்திலி ருந்து கொஸ்மிக் கதிர்கள் அண்ட வெளியில் உண்டாகி வருகின்றன. 1928ல் டாக்டர் ஆர். ஏ. மில்லிகன் என்ற மேதை உடுக்கள் இடையிருந்து மின்காந்தச் சிற்றலைகள் அல்லது நுண் அலைகள் வருவதாகக் கண்டறிந்து தெரியப்படுத்தினார். சூரிய குடும்பத்தை கதிர்மண்டலம் காத்து வருகின்றது. அதேபோல் கிரகங்களின் காந்தப் புலன்கள் எந்தெந்த கிரகங்கள் கொண்டுள்ளதோ அவற்றுக்கு மட்டும்) பாதுகாப்பைச் செய்கின்றன. உடுக்களிடையேயுள்ள ஊடுகம் வாயிலாக மாறுதல் காண்கின்றது. சூரியனின் மின்காந்தப் புலன்கள் நீண்ட காலத்து அட்டவணைப்படி மாறுதல்கள் காண்கின்றன. எனவே மின்காந்த சிற்றலைகள் சுற்றெறிவு சூரிய குடும்பத்தில் அடிக்கடி பற்பல மாறுதல்களுக்குள்ளாகின்றன.

அது எவ்வளவு என்பது இன்னமும் அறியப்படாத ஒன்றாகவே இருக்கின்றன. உட்புறச் சூரிய குடும்பம் என்பது மரபார்ந்த பெயர் ஆகும். அதனுள் அடங்கும் பிரதேசத்தில் நிலம் சார் ந்த கிரகங்கள் மற்றும் நட்சத்திர வடிவுக்கோள்கள் உள்ளன. மணல் சத்து உப்புக்கள் மற்றும் உலோகங்களால் இயன்ற உட்புற சூரிய குடும்பத்தில் இருக்கும் பொருள்கள் சூரியனுக்கு மிக அருகில் குவியல் கூளமாக அமைந்துள் ளன. மொத்த பிரதேசமும் ஜூபி டர், சனி இடைப்படு தூரத்தைக் காட்டினும் அதன் ஆரம் குறுகியதா கவே உள்ளது.

Share this article :

+ comments + 1 comments

June 3, 2019 at 1:58 AM

good!

Post a Comment