தாமஸ் ஆல்வா எடிசன்
“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்.” என்ற வார்த்தைகளை சாதனைகளின் பட்டியலில் படம் பிடித்துக் காட்டிய வினோத மனிதன் .
ஆம்.!! தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் பிறக்கும்பொழுதே தனது தலை பின்புறமாக சற்று நீட்டிய நிலையில் பிறந்தார். அவர் வளர்ந்தப் பிறகும் அதன் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் போனது. அவர் பள்ளிக்கு செல்லும் வயது வந்ததும் தாமஸ் ஆல்வா எடிசனை அவரது தாயார் பள்ளியில் சேர்த்தார். தான் பள்ளிக்கு சென்ற ஒரிரு நாட்களில் தாமஸ் தனது அன்னையிடம் நான் பள்ளிக்கு இனி செல்லமாட்டேன் என்று அடம்பிடித்தார். காரணம் கேட்ட அவர் தாய் பள்ளியில் எல்லோரும் என்னை ”கோண மண்டையா” ”கோண மண்டையா” என்று சொல்லி கேலி செய்வதாக கூறினார். ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி அவரது தாயார் மீண்டும் பள்ளிக்கு படிக்க அனுப்பி வைத்தார். ஒரு இரண்டு மாதங்கள் சரியாக பள்ளி சென்ற எடிசன் மீண்டும் ஒரு நாள் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். ‘மூளைக் கோளாறு உள்ளவன் ‘ என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார்.
மீண்டும் சமாதனப்படுத்தி பள்ளிக்கு அனுப்பப்பட்ட எடிசன் மீண்டும் ஒருமாதகாலம் மட்டுமே பள்ளிக்கு சரியாக சென்றிருப்பார். வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல மறுப்புத் தெரிவிக்கத் தொடங்கிய எடிசனின் செயல் கண்டு கோபம் கொண்ட அவரின் தாயார் உனக்கு ”கோண மண்டை” அதுதான் படிப்பும் ஏறவில்லை, சொல்வதையும் கேட்க மறுக்கிறாய் என்று அடிக்கத் தொடங்கினார். அன்றுடன் தனது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த அதே தாமஸ் ஆல்வா எடிசன்தான். பிற்காலத்தில் மென்டோ பார்க்கின் மந்திரவாதி எனப் போற்றப்பட்டவர்; அமெரிக்க அரசு அவருக்கு சுமார் 1097 அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை வழங்கியிருந்தது உலகத்தில் அதிகக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி சாதித்தவர்களின் பட்டியலில் இன்றும் முதல் இடத்தில் திகழ்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதில் இன்னும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் வியப்பானத் தகவல் என்னவென்றால்.எந்த ஒரு தனி மனிதனுக்காகவும் தங்களின் சட்டத்தை மாற்றிக் கொள்ளாத அமெரிக்க முதல் முறையாக ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார்.அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 மணிக்கு ‘வி Statue of Liberty கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் Traffic Signals விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் அனைத்துவைக்கப் பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த பின்பு அவரின் தலையை ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் மனிதர்களாகிய நமக்கு இருக்கும் அதே அளவுதான் மூளை இருக்கிறது. ஆனால் அவரின் பின்புறத் தலையின் நீந்தப் பகுதியில்தான் ஏதோ கண்டறிய இயலாத மிகப்பெரிய மர்மம் மறைந்திருப்பதாக அறிக்கை பிறப்பித்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். .
டிஸ்கி : ஒருவேளை நமக்குத் தெரிந்தே யாருக்கேனும் சராசரி மனிதனின் வளர்ச்சியில் இருந்து மாறுபட்ட நிலையில் உடல்களின் வளர்ச்சி இருந்தால் இவர்களும் நாளை வரலாறு பேசப்போகும் ஏதேனும் தனி சிறப்பு பெற்று இருப்பார்களோ என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றும் என்பது மட்டும் திண்ணம்.
சரி நண்பர்களே.! இந்த இன்று ஒரு தகவல் எந்த தொடரில் இன்று நாம் பார்த்த இந்தத் தகவலும் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரியத் தகவலுடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்.
Post a Comment